Wednesday, 18 September 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 

நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. 
இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத்தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats