Friday, 20 September 2013

பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"

பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அக்., 5ம் தேதி வரை, பிளஸ் 2 தனித் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனி தேர்வும், 23ம் தேதி துவங்குகிறது. ஆனால், 30ம் தேதியுடன் முடிகிறது. 170 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 46 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வர், இன்று முதல், 23ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்"களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை நேற்று அறிவித்தது. இதேபோல், 10ம் வகுப்பு தனி தேர்வர்களும், தங்களது, "ஹால் டிக்கெட்"டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்யலாம். "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், 21, 22ம் தேதிகளில், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats