Sunday, 15 September 2013

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர்
பணியிடம், மிகவும் முக்கியமானது. இளநிலை உதவியாளர்களுக்கு மேல் நிலையிலும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு, கீழ் நிலையிலும், உதவியாளர்கள் பணி புரிகின்றனர். கோப்புகளை உருவாக்குவது, அதை பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை, உதவியாளர்கள் செய்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும், நேரடியாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பெரும்பாலும், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், பல மாதங்களாக, காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறையில், 900 பணியிடங்களும், தேர்வுத் துறையில், 100 பணியிடங்கள் வரையிலும், காலியாக இருப்பதாக தெரிகிறது. இந்த துறைகளில், தற்போது பணிபுரியும் இளநிலை உதவியாளர்களில், அதிகம் பேர், உதவியாளர் பதவி உயர்வுக்கு, தகுதி பெறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பணிகள் தேங்கியிருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னையை தீர்க்க, நேரடியாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 1,000 உதவியாளர்களை பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், தமிழக அரசுக்கு, பள்ளிக்கல்வித் துறை, அறிக்கை அனுப்பி உள்ளது. தமிழக அரசு, விரைவில் ஒப்புதல் அளித்தபின், இதுகுறித்த அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடும். உதவியாளர் பணி, குரூப்-2வில் வருகிறது. ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள், உதவியாளர் பணிக்கு, விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats