5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 6 January 2014

தேர்வுத்தாள் மறு மதிப்பீடு: அண்ணா பல்கலை.யில் புதிய நடைமுறை

தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டு முறையில் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி தகுதியுள்ளவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கூறியது:
தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டுக்கு தகுதி இல்லாதவதர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் ரூ.300 செலுத்தி வினாத்தாள் நகலைப் பெற வேண்டும். அந்த நகலை துறைப் பேராசிரியர் அல்லது பாட நிபுணர் ஒருவரிடம் சமர்ப்பித்து மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வில் மாணவருக்கு கூடுதல் மதிப்பெண் வருகிறது என்றால், நகலை ஆய்வு செய்த பேராசிரியர் அல்லது பாட நிபுணர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ரூ.400 கட்டணம் செலுத்தி மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மறு மதிப்பீட்டிலும் திருப்தியடையாத மாணவர்கள், தேர்வுத் தாளை மீண்டும் ஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நடைமுறைகள் மறு மதிப்பீட்டு முடிவுடன் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats