தில்லி கல்வி அமைச்சர் மனிஷ்சிசோதியா பேச்சு
ல் கல்வி அமைப்பு சீர்கெட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் மனிஷ்சிசோதியா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது தில்லியில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு மேல்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரிகளுடன் சந்தித்து பேசி தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டுவருவதுகுறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.
நம் சமூகம் மற்றும் நிர்வாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் கல்வியை வலுப்படுத்த வேண்டும். அதை செய்யாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவே கல்வித்துறையின் மாற்றம் வெள்ள நிவாரணம் அவசரகால திட்டம் போல் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது எல்லாவற்றுக்கும் இறுதி தீர்வு கல்வியால் மட்டுமே கொண்டுவரமுடியும். இதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை.
ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் நுழைகின்றனர். ஆனால் 2.65 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தங்கள் பள்ளிப்படிபை முடிக்கின்றனர். ஏறக்குறைய 50 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். எங்கு தவறு நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். கல்வி வியாபரமயமாக மாறிவருகிறது அரசுப் பள்ளிகள் தன் நம்பகதன்மையை இழந்து வருகிறது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment