7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணியினர் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவ ட்ட செயலாளர் நாகரா ஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் முடிவின்படி 7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. இதை யொட்டி தமிழக அரசின் சார்பில் கல்வித்துறை செயலாளர் மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூகதீர்வு ஏற்படாததால் மார்ச் 6ம் தேதி இன்று தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள் ளது.
அப்போது, தமிழகத்தில் அனைத்து தொடக்க நடுநிலை பள்ளிகள் மூடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 3000 ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும் 800 பள்ளிகள் மூடப்படுகி றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment