Monday, 3 March 2014

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்-தினகரன் செய்தி

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 26, 27 தேதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக அன்று பள்ளிகளை மூடக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் உத்தரவு:தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) மார்ச் 6ம் தேதி அன்று நடத்த உள்ள அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது.

மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்தும், வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை பணியமர்த்தி வகுப்புகளை நடத்த வேண்டும்.வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியலை சேகரித்து போராடுவோர் எண்ணிக்கை விபரங்களை 6ம் தேதி காலை 10 மணிக்கு தொலைபேசியில் இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை நிறுத்தம் செய்ய உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.6ம் தேதி விடுப்பு விண்ணப்பம் பெறப்பட்டால் அதனை ரத்து செய்து ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats