Saturday, 8 March 2014

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி

அரசு கருவூலத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயில், 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், முன்னதாகவே, மத்திய அரசு, கடந்த, 1ம் தேதி, அதன் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது; ஆனால், தமிழக அரசு, இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கடந்த ஆண்டு, 35 லட்சம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 600 கோடி ரூபாயும், கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு, 320 கோடி ரூபாயும் வழங்காமல், நிலுவை உள்ளது. இதேபோல், பல திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தான், 'மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த பின்பும், தமிழக அரசு, அறிவிக்கவில்லை' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


அரசு, கருவூலத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வரும் மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கஜானாவில், நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அகவிலைப்படி உயர்வை அறிவித்தால், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவில், தமிழக அரசு நிதி திரட்ட வேண்டும். அதற்கு, என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை' என்றார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats