பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள் புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் சில தேர்வுக்கூடங்களில் கூடுதல் விடைத்தாள் கேட்டால் தராமல் கெடுபிடி செய்வதாக கூறப்படுகிறது. இருக்கிற பக்கங்களிலேயே எழுதி முடிக்க வேண்டியது தானே? 38 பக்கம் போதாதா என வினாக்கள் எழுப்பப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமைகள் ஏற்படுவதால் கண்காணிப்பு பணியில் உள்ள சில ஆசிரியர்கள் இந்த கெடுபிடி செய்வதாக கூறப்படுகிறது.அறிவியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவி யல் போன்ற தேர்வுகளுக்கு பெரும்பாலான மாணவர்களுக்கு நிச்சயம் கூடுதல் பக்கங்கள் தேவைப் படும். வரும் தேர்வுகளிலும் கெடு பிடி நீடித்தால் என்ன செய் வது என்ற கலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர்.

No comments:
Post a Comment