Tuesday, 29 April 2014

செயல் வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தைகளின் ஆரம்பகால கல்வி செயல்வழியிலேயே நடைபெற வேண்டுமென்பது பல காலமாக கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படை கோட்பாடாகும்.


இதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்கள் செயல்வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டம் எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முதலில் 10 பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தன. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன.

வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வி தொடக்கப்பள்ளியில் 245 பள்ளிகள் உள்ளன. இதில் 245 பள்ளிகளில் 5617 மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள். ஆனால் மொத்தம் 2137 பள்ளிகளில் 245 பள்ளிகளில் மட்டுமே உள்ளன.

அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இத்திட்டத்தில் செயல்வழிக் கற்றல் முறையில் ஒவ்வொரு முறையில் குழந்தையும் தன்னுடைய வேகத்தில் பயிலவேண்டும் என்பது நியதி.

ஏனென்றால் கற்றல் என்பது எல்லோருக்கும் சமச்சீராக அமையும் என்று கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவன் இதில் கற்றல் அட்டை என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

கற்றல் ஏணியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் புரிதல் எங்கு இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்கும், ஒவ்வொரு குழந்தையும் புரிதலோடு படிக்கவும், அவர்களுடைய வேகத்தில் படிக்கவும், எதை கற்றல் வழிகளில் சேர்த்தால் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டதாக அமையவேண்டும் என்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதையொட்டி 20142015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வேலூர் மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் எண்ணிக்கை:

ஆலங்காயம்  25
அணைக்கட்டு  10
அரக்கோணம்  8
ஆற்காடு  14
குடியாத்தம்  16
ஜோலார்பேட்  15
கே.வி.குப்பம்  1
கந்திலி  20
கனியம்பாடி  5
காட்பாடி  17
காவேரிபாக்கம்  15
மாதனூர்  13
நாட்றம்பள்ளி  6
நெமிலி  13
பேர்ணாம்பட்டு  7
சோளிங்கர்  13
திருப்பத்தூர்  10
திமிரி  8
வேலூர் அர்பன்  8
வேலூர் ரூரல்  9
கிழக்கு வாலாஜா  6
மேற்கு வாலாஜா  6
தெலுங்கு பள்ளிகள்:
குடியாத்தம்  3
சோளிங்கர்  2

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats